1.நடைமுறையில் உள்ள பயிர் இரகங்களைக் காட்டிலும் உயர்ந்த பயிர் இரகங்களைப் பெருக்கம் செய்தல்.
2.பயிர் விளைச்சலை அதிகரித்தல்.
3.விளைபொருட்களின் தரம் உயர்த்துதல்.
4., பூச்சிநோய் காரணிக்கு எதிர்ப்பு சக்தி ஊட்டுதல்.
5.வறட்சி, உவர் தன்மை, அதிக வெப்பம், குளிர், பனி ஆகியவற்றை தாங்கி வளரும் தன்மையை அதிகரித்தல்.
6.குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் பெறுதல்.
7.ஒளி மற்றும் வெப்ப மாறுபாட்டால் பாதிப்புக்குள்ளாத இரகங்களைத் தோற்றுவித்தல்.
8.ஒரே சமயத்தில் பயிர் முதிர்ச்சி அடைதல்.
9.பயிருக்குத் தேவையான புறப்பண்புகளைத் தோற்றுவித்தல்.
10.அனைத்து பருவங்கள் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ற இரகங்களை உற்பத்தி செய்தல்