Skip to content

கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

1.ராணிக்கெட் (வெள்ளைக்கழிச்சல்): சுவாச உறுப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் பசுமை, வெண்மை கலந்த துர்நாற்றம் கொண்ட கழிச்சல் ஏற்படும். தலையை இரு கால்களுக்கிடையே வைத்துக்கொள்ளும். கடுமையான காய்ச்சல் காரணமாக தீவனம் உட்கொள்ளாது.

கட்டுப்பாடு: இளம் குஞ்சுகளுக்கு RTV F1 என்ற தடுப்பூசி போட வேண்டும். இறந்த கோழிகளை எரிக்க வேண்டும்.

2.கோலி செப்டிசிமியா: கோழி இறகுகள் சிலிர்த்தும், சோர்ந்தும் காணப்படும்.

கட்டுப்பாடு: இந்நோய் நீர் மூலமாகப் பரவுவதால், கொதிக்க வைத்த நீரைக் கொடுக்க வேண்டும். மேலும் ஆம்பிசிலின் மருந்து கொடுக்கலாம்.

3.சளி(கொரைசா): கண்கள் மற்றும் மூக்கு துவாரத்தில் நீர் வடியும்; தொடர்ந்து மூக்கில் சளி வரும். கண்கள் சுருங்கி கண் இமைகள் ஒட்டிக்கொள்ளும்; தலை வீங்கி காணப்படும்; தீவனம் உட்கொள்ளுதல் குறைத்து முட்டை உற்பத்தி குறையும்.

கட்டுப்பாடு: கோழிப்பண்ணையை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். தீவனத்தில் கீரைகளை சேர்க்க வேண்டும். தீவனத்துடன் என்ரோப்ளாக்சஸின் என்ற மருந்தை கலந்து கொடுக்க வேண்டும்.

4.புல்லோரம்: பாதிக்கப்பட்ட குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி எடுத்தது போல் காணப்படும். எச்சத்துடன் நீர் கலந்து அடிக்கடி வெளியேறும்.

கட்டுப்பாடு: கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கோழிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

5.டைபாய்டு: அதிக காய்ச்சல் காரணமாக சோர்வுடன் இருக்கும். எச்சம் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு: குடிநீரில் கிருமி கொல்லி மருந்தை கலந்து கொடுக்க வேண்டும். 0.04 சத ப்யூரோசோலிடின் மருந்தை தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும்.

6.கோழிகளில் இரத்தக்கழிச்சல்: குடலில் அழற்சி ஏற்படுவதால் இரத்தக் கழிச்சல் ஏற்படும். இதனால் இரத்த சோகை உருவாகும்.

கட்டுப்பாடு: இடநெருக்கடி உள்ள இடத்தில் கோழிகளை வளர்க்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குஞ்சுகளை அப்புறப்படுத்த வேண்டும். சலவை சோடா கலவை கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ப்ளீச்சீங் பவுடர் கலந்து சுவர்களுக்குப் பூசவேண்டும். காட்ரினால் என்ற மருந்தை 4 கிராம் என்ற அளவில் 1 லி நீரில் கலந்து கொடுக்கலாம் அல்லது பைபுரான் 1 மாத்திரையை 1லி நீரில் கலந்து கொடுக்கலாம்.

1 thought on “கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)”

Leave a Reply

editor news

editor news