கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது.
இதில், A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும்)
B -வறண்ட காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும் ஆனால் குறைந்த மழைப்பொழிவு இருக்கும்)
C -வறண்ட குளிரான சூழல் நிலவும் (00-180C வெப்பநிலை நிலவும்)
H-மலைசார்ந்த காலநிலை நிலவும்
இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்
காலநிலைவகை | பகுதிகள் | சிறப்பம்சங்கள் |
வெப்பமண்டல மழைக்காடுகள் காலநிலை(AM)
|
மேற்குத்தொடர்ச்சி மலைகள், மேற்கு கடற்கரைச் சமவெளிகள், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சிலபகுதிகள்
|
வருடம் முழுவதும் அதிகவெப்பநிலை, அதிகபட்ச பருவமழைப்பொழிவு, வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 200 செ.மீ.
|
வெப்பமண்டல சவானா காலநிலை(AW)
|
மேற்குத்தொடர்ச்சி மலைகள், மேற்கு கடற்கரைச் சமவெளிகள், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவின் சிலபகுதிகள்
|
வறண்ட குளிர்காலம், வருடாந்திர மழைப்பொழிவு 76 முதல் 150 செ.மீ. வரை
|
வெப்பமண்டல அரைப்பாலைவன ஸ்டெப்பி காலநிலை(Bs)
|
மாகாராஷ்டிரம் முதல் தமிழகம் வரையிலான மழை மறைவு பிரதேசங்கள்
|
குறைந்தபட்ச மழைப்பொழிவு (38 முதல் 80 செ.மீ வரை) 200 C முதல் 300C வரையிலான வெப்பநிலை
|
வெப்பமண்டல பாலைவன காலநிலை(Bwh)
|
இராஜஸ்தானின் பார்மர், பீகானீர் மற்றும் ஜெய்சல்மார் பகுதி மற்றும் கட்ச்சின் ஒரு பகுதி
|
மிகக்குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிகபட்ச வெப்பநிலை
|
வெப்பமண்டல பாலைவன காலநிலை(Bwh)
|
இமயமலையின் தென்பகுதி
|
மிதமான குளிர்காலம் மற்றும் மிதமிஞ்சிய வெப்பநிலை நிலவும் கோடைகாலம்
|
மலைப்பகுதி காலநிலை(H)
|
6000 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட மலைப்பகுதிகள்
|
63 முதல் 254 செ.மீ வரையிலான மழைப்பொழிவு
|
வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஸ்டெப்பி வகை காலநிலை(Bsh)
|
பஞ்சாப், ஹரியானா மற்றும் கட்ச் பகுதி
|
12 முதல் 350 C வரையிலான வெப்பநிலை வேறுபாடு
|