- ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய இரண்டரை சென்ட் பரப்பில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.
- சேற்றுழவு செய்து மண்ணைப் புளிக்க வைத்து 15 நாள்கள் கழித்து, நாற்றங்காலைச் சமன்படுத்தி 1 கிலோ விதைநெல்லைத் தூவ வேண்டும்.
- 2 கிலோ கடலைப்பிண்ணாக்குடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து தண்ணீரில் ஒரு நாள் ஊறவைத்து… இதனுடன் 10 கிலோ சாண எரிவாயு மட்கு, 2 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் ஊற வைக்க வேண்டும்.
- இக்கலவையை விதைத்த 9-ம் நாள் நாற்றாங்காலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். 11-ம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் ஜீவாமிர்தம், அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.
- ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தலா 5 கிலோ சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றைக் கலந்து விதைத்து, 45-ம் நாள் மடக்கி உழ வேண்டும்.
- இதில் சேற்றுழவு செய்து 20 நாள்கள் அப்படியே விட வேண்டும். பிறகு 2 சால் உழவு ஓட்டி நிலத்தைச் சமன்படுத்தி, வரிசைக்கு வரிசை 50 சென்டி மீட்டர், குத்துக்குக் குத்து 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்த 10-ம் நாள் 150 கிலோ சாண எரிவாயு மட்குடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி ஒரு நாள் வைத்திருந்து தெளிக்க வேண்டும்.
- 20-25 நாள்களில் கோனே வீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் அழுத்தி விட வேண்டும். 40-ம் நாள் 100 கிலோ சாண எரிவாயு மட்குடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து புரட்டி, ஒரு நாள் வைத்திருந்து, தெளிக்க வேண்டும்.
- 40-ம் நாள் களையெடுக்க வேண்டும். 45 மற்றும் 55-ம் நாள்களில் 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் சாண எரிவாயு கழிவுநீரைக் கலந்து விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
- 80-90 நாள்களில் கதிர் வரத் தொடங்கும்.
- 110-115 நாள்களில் அறுவடைக்கு வரும்.
- அந்தந்த நெல் ரகங்களின் வயதைப் பொறுத்து கதிர் விடும் நாள்கள் அறுவடைக்கான நாள்கள் மாறுபடும்.
jeevamirtham epadi produce pandrathunga
sekkerama aruvadi saiya vara vali
Nellu
Payirgalin vagaikal athanin aayul kalam matrum atharku yeatra neealam patri kurungal