உலகில் முதல் மீத்தேன் ஆற்றல் கொண்ட டிராக்டரை இத்தாலி உருவாக்கி உள்ளது. இந்த புதிய டிராக்டரை இத்தாலியின் பொறியாளார்கள் மீத்தேன் எரிபொருளை கொண்டு இயங்கும் விதத்தில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது Green House பாதிப்பு உலகில் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் Green House பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட மாசு மற்றும் இயற்கை பாதிப்பால் ஏற்படுகிறது. Green House-ல் உள்ள கார்பனின் அளவினை குறைக்க விலங்குகளின் கழிவிலிருந்து இயந்திரங்களை இயக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இத்தாலி விஞ்ஞானிகள் மீத்தேன் ஆற்றல் மூலம் இயங்கும் விதத்தில் தயாரித்துள்ளனர்.
இந்த மீத்தேன் டிராக்டரை அடுத்து ஐந்து ஆண்டுகளில் பெருமளவு பயன்படுத்தினால் விவசாயத்தில் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.