டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
ஆட்டு எரு, மாட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து பாத்தி முழுவதும் தூவி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 2 கிலோ விதைநெல்லை தூவி விதைக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இப்படி தண்ணீரைத் தெளிப்பதால், நாற்றுகள் வளையாமல் நிமிர்ந்து வளரும். விதைத்த 3-ம் நாளில் இருந்து தினமும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் எனக் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாளில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகி விடும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral