ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்..
செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது, இரண்டு நாள்கள் காயவிட வேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது, ஆறு அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க முடியும். பிறகு சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழியிலும் தலா ஒரு கிலோ அளவு மட்கிய சாணம் இட்டு, தண்ணீர்விட்டு ஒரு வாரம் ஆறவிட வேண்டும். குழியின் நடுவில் கன்றை நடவு செய்து, மேல் மண் கொண்டு மூடி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்யும் போது ஒன்றரை மாத வயதுள்ள கன்றுகளை வாங்குவது நல்லது. கன்றுகளை வாங்கும்போதே 200 கன்றுகளாகச் சேர்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். நடவு செய்த பிறகு, சரியாக வளராத கன்றுகளை அப்புறப்படுத்திவிட்டு இந்தக் கன்றுகளை நடவு செய்துகொள்ள வேண்டும். நடவு செய்த 10-ம் நாள் செடிகளின் தூரில் மண் அணைத்துவிட வேண்டும். மண் காயாத அளவுக்குத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral