கவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் மழைநீர் உள்ளே இறங்காது. கவாத்து செய்து முடித்தவுடன், வெட்டுப்பாகத்தில் குப்பைமேனிக் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும். முறையான கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக மா மரங்களின் வில்லனான தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். முக்கியமாக கவாத்துச் செய்யும்போது, அதிகக் கிளைகளை வெட்டி விடக்கூடாது. மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் வைத்து, கவாத்துச் செய்ய வேண்டும். அதேபோல மாந்தோப்பில் இலவ மரங்களும், முந்திரி மரங்களும் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral