Skip to content

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்..!

கால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு அதிகளவு அதிகளவு தவிடு கொடுப்பது ஆபத்தில் முடிந்துவிடும். ஆடுகளைத் தாக்கும் நோய்களில், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை, ஆட்டுக்கொல்லி நோய், அடைப்பான், நீலநாக்கு நோய் போன்றவை முக்கியமானவை. ஆடுகளுக்கு ஜூன் மாதத்தில் ஆட்டுக்கொல்லி எனப்படும் பிபிஆர் நோய்க்கான தடுப்பூசியும்; ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசியும்; அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசியும் போட வேண்டும். நீலநாக்கு நோய்க்கான தடுப்பூசி செம்மறி ஆடுகளுக்கு மட்டும் போட்டால் போதும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆந்த்ராக்ஸ் எனப்படும் அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி, தேவைக்கு ஏற்ப ஆட்டு அம்மைக்கான தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், ஆடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுத்துவிடலாம். ஆட்டுக்குட்டிகளுக்குப் பிறந்த 1, 4, 7-ம் மாதங்களில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகளுக்கு 4 சதுர அடியும், பெட்டை ஆடுகளுக்கு 10 முதல் 15 சதுர அடியும், கிடாக்களுக்கு 15 முதல் 20 சதுர அடி இடவசதி இருப்பது போல் கொட்டகை அமைக்க வேண்டியது அவசியம்.

வெண்பன்றிகளுக்கு ஆண்டுக்கொரு முறை பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். பன்றிக்குட்டிகளுக்கு 3 மற்றும் 13-ம் நாள் இரும்புச்சத்து ஊசி போட வேண்டும் .இரும்புச்சத்து டானிக்கூட கொடுக்கலாம். பன்றிகளுக்குப் பல்வெட்டுவது முக்கியமானது. குட்டிகளுக்குப் பிறந்த 7 நாட்களுக்குள் பக்கவாட்டில் உள்ள கூர்மையான கோரை பற்களை வெட்டிவிட வேண்டும். கறிக்காக வளர்க்கப்படும் ஆண் பன்றிகளுக்கு நான்காவது வாரத்துக்குள் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

 

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj