இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வது குறித்து, இயற்கை விவசாயி ‘முசிறி’ யோகநாதன் சொல்லும் விஷயங்கள் இங்கே..
அரைக்கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால்.. மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஓர் அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். பஞ்சகவ்யா தெளிப்பதாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கலந்து தெளித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்த வளர்ச்சி ஊக்கியும், உரமும் தேவையில்லை.
ஒரு ஏக்கர் நிலத்தில் அரைக்கீரை சாகுபடி செய்ய ஏழு கிலோ விதை தேவைப்படும். ஓர் அறுவடை முடிந்து, அடுத்த அறுவடைக்கு 12 நாட்கள் ஆகும். இயற்கை விவசாயத்தில் விளைந்த கீரை செழிப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral