தேவையானவை:
சோற்றுக்கற்றாழை – 3 கிலோ
பிரண்டை – 3 கிலோ
வேப்பிலை – 2 கிலோ
பப்பாளி இலை – 2 கிலோ
நொச்சி இலை – 2 கிலோ
ஆமணக்கு இலை – 2 கிலோ
ஊமத்தை இலை – 2 கிலோ
எருக்கு இலை – 2 கிலோ
ஆவாரை இலை – 2 கிலோ
சுண்டைக்காய்ச் செடி இலை – 2 கிலோ
ஆடு தீண்டா பாலை இலை – 2 கிலோ
இஞ்சி – ஒரு கிலோ
பூண்டு – அரைகிலோ
பச்சை மிளகாய் – 2 கிலோ
ஒரு பாத்திரத்தில் அனைத்து இலைகளையும் பொடிப்பொடியாக வெட்டிப் போட வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை உரலில் இடித்து அவற்றுடன் சேர்க்கவேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி பாத்திரத்தில் மூடி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் இறக்கி 20 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
மீண்டும் அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்படி நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கி நிழலில் வைத்து, மூடியால் இறுக மூடி அதன் மேல் துணியை வைத்து காற்றுப் புகாதவாறு இறுக்கமாகக் கட்டி விட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இக்கரைசலை வடிகட்டி.. 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral