தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.
தற்போது ஆண்டு முழுவதுமே அனைத்து வகையான பயிர்களும் விதைக்கப்பட்டாலும்.. அந்தந்தப் பருவத்துக்கான தனித்தன்மை உண்டு. ஆடிப்பட்டத்தின்போது, சுமாரான மழையே கிடைப்பதால், குறுகியகால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்வது நல்லது. நெல்லில் 100-110 நாட்கள் வயதுடைய ரகங்களைத் தேர்வு செய்யலாம். சோளம், நிலக்கடலை, துவரை, கேழ்வரகு, சாமை, தினை ஆகியன 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர்கள். அதனால் இவற்றைத் தேர்வு செய்யலாம்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும். இந்தப் பருவத்தில் நீண்டகால ரகங்கள் அல்லது பயிர்களை (6 மாதங்கள்) தேர்வு செய்யலாம்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral