ஏக்கருக்கு 2,500 செடிகள் !
”பட்டன் ரோஜா பதியன் (கன்று) ஊன்ற கார்த்திகைப் பட்டம் சிறப்பானது. களியும் மணலும் கலந்த இருமண் பாடு மற்றும் செம்மண் ஆகியவை ஏற்றவை. தேர்வு செய்த சாகுபடி நிலத்தில்.. 3 சால் உழவு ஓட்டி பிறகு, ஏக்கருக்கு 3 டன் மாட்டு எரு இட்டு ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் ஓர் அடி அகலமும் அரையடி உயரமும் கொண்ட நீளமான பாத்திகள் அமைக்க வேண்டும்.
பாத்தியின் நடுவில் அரையடி ஆழத்துக்கு குழி எடுத்து இரண்டடி இடைவெளியில் பட்டன் ரோஜா பதியன் கன்றுகளை ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 பதியன் கன்றுகளுக்கு மேல் ஊன்றலாம். பட்டன் ரோஜா ரோஜா நடவு வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். நிலத்தில் கன்றுகளை நடவு செய்த 15-20 நாட்களில் வேர் பிடித்து விடும். மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கிவிடும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீரோடு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விட வேண்டும். 10 லிட்டர் மாட்டு சிறுநீரில், 5 கிலோ பசுஞ்சாணம், உரலில் இடித்த 5 கிலோ வேப்பிலை கலந்து 48 மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜா செடிகளின் மீது மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சிவிரட்டியாகவும் பலன் அளிக்கும். மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 100 கிலோ கன ஜீவாமிர்தம் தூவ வேண்டும். ஒரு முறை பட்டன் ரோஜா நடவு செய்தால் 5 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். மூன்றாம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral