அமெரிக்க மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர்கள் தற்போது சிலந்தி பற்றிய புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் சிலந்தி காய்கறிகளையும் உணவாக உட்கொள்கிறது என்பதாகும்.
சிலந்திகள் பூச்சிகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது என்று நாம் இன்றளவும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போதைய ஆய்வுப்படி அது காய்கறிகளையும் உணவாக உட்கொள்கிறது என்பது நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அவர்களுடைய ஆய்வுப்படி பத்து குடும்பத்தை சார்ந்த சிலந்திகள் மரங்கள், புதர்கள், களைகள், புற்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சைவ உண்ணிகள் பெரும்பாலும் அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்து வெப்ப மண்டல பகுதிகளிலும் உள்ளது. பரவலாக அதிக வெப்பமான பகுதிகளில் இந்த இனங்கள் அதிகம் காணப்படுகிறது.
https://www.sciencedaily.com/releases/2016/03/160314091121.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli