ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதங்களில்தான் வறண்ட பாலை வனப்பகுதிகளில் வைல்ட் பூக்கள் பூக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது பாலைவனப் பகுதிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றது. இந்த நிகழ்வு கடந்த நூறு ஆண்டுகளில் பார்க்க முடியாத அற்புத காட்சியாக உள்ளது. இந்த பூக்களை ‘superbloom’ என்று அழைக்கின்றனர்.
இந்த பூக்கள் வழக்கத்திற்கு மாறாக பாலைவன பகுதிகளில் பெய்த மழையினால் தற்போது பூத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாது வசந்த காலத்தில் இருப்பதை போன்று மிக ரம்யமாக காட்சியளிக்கிறது.
இந்த பாலை வன பூக்கும் தாவரத்தினை ஜாக்கில்-Beanstalk பாலைவன தங்கம் என்று கூறுகின்றனர். இந்த பூக்கும் தாவரம் கிட்டதட்ட 3 அடி உயரத்தில் வளருகிறது. புவியில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
http://www.popsci.com/death-valley-is-covered-in-flowers
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli