பழங்காலத்தில் தென் இந்தியாவில் மிக பிரபலமான சிறந்த உணவு முருங்கை கீரை, முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்காய் ஆகும். தற்போது 2016-ல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பெரும்பாலான நாடுகளில் இருக்கப்போவது முருங்கை. இந்த மரத்தின் இலை மிக ருசியான கேழ்வரகு ரொட்டி தயார் செய்வதற்கு உதவுகிறது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தற்போது லண்டனில் இந்த முருங்கை கீரைக்கு நல்ல வரவேற்பு வந்துள்ளது. New York City-ல் உள்ள ஆர்கானிக் கடைகளில் தற்போது மிக அதிகமாக விற்பனையாகி கொண்டிருக்கும் பொருள் முருங்கை மரத்தின் இலை, காய், பூ ஆகும். இந்த மரக்காயினை சாம்பார் வைப்பதில் கை தேர்ந்தவர்கள் இந்தியர்கள், அதுமட்டுமல்லாது சைவ சாப்பாட்டில் பிரதான இடத்தை பிடித்திருப்பதும் இந்த முருங்கைதான்.
இந்த முருங்கையில் அதிக சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் கண்டிப்பாக தெரியாது. இதில் அதிகமான விட்டமின்கள் உள்ளது. ஒரு ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சத்தினை காட்டிலும் இதில் அதிக அளவு சத்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சிய சத்தினை காட்டிலும் இதில் அதிகம், மற்றும் கேரட்டில் உள்ள விட்டமின் A-வை காட்டிலும் அதிக ஆற்றல் கொண்டது.
https://in.news.yahoo.com/food-trends-humble-moringa-superfood-181400064.html
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli