குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சேற்று தண்ணீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த இயந்திரத்தை Mountain Safety Research –ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு நீரினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதாகும். ஏனென்றால் இராணுவ வீரர்களுக்கு மலைப்பகுதியில் நல்ல குடிநீர் கிடைப்பதில்லை.
அவர்கள் பருகும் நீரில் அதிக அளவு பாதிப்பு தரும் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்யும் வகையில் இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளனர். இந்த இயந்திரம் தீமை தரும் பாக்டீரியாக்களை வடிகட்டி தூய குடிநீரை அளிக்கிறது. தற்போது இந்த இயந்திரம் விற்பனையாகி வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனையாகி வருகிறது. இதனுடைய விலை $350 ஆகும்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli