Skip to content

Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

University of Institute Food and Agriculture Science Florida விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி தற்போது Snail Kiten பறவைகள் இனம் அழிந்துவருவது தெரிய வந்துள்ளது. இந்த பறவை இனங்கள் பெரும்பாலும் எவர்கிளேட்ஸ் வடக்கு ஏரி வாழ்விடங்களில் குறைந்து வருகின்றன. 1999-ல் 3500ஆக இருந்த இந்த பறவை இனத்தில் 2008-ம் ஆண்டு 700 குறைந்துள்ளது. இதேபோன்று 2014-ம் ஆண்டு சுமார் 1700 இனம் குறைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து 17 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின்படி இந்த பறவை இனம் அதிக அளவில் அழிந்துவருவது தெரியவந்துள்ளது. இந்த இனங்கள் அழிந்ததற்கு முக்கிய காரணம் நகர மயமாதலே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது எஞ்சியுள்ள  இந்த பறவை இனங்களை பாதுகாக்க ஒரே வழி, இயற்கையான சூழலை ஏற்படுத்துவதே ஆகும். இல்லையெனில் அரிதான இந்த இனங்கள் நம் சந்ததியினர், புத்தகத்தில் மட்டுமே படிக்கும் நிலை ஏற்படும்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151210093602.htm

மேலும் செய்திகளுக்கு

 https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj