Umea பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது co2 –வை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது co2 அளவு அதிகரிப்பால் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிதை வரலாற்று மாற்றங்கள் உலகளவில் முதன் முதலில் ஸ்வீடிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெரும்பாலான தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மற்றும் Photorespiration இடையே மாற்றம் நடந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த ஒளிச்சேர்க்கை மாறுபாட்டால் உலக வெப்பநிலை அதிகரித்துள்ளது. தற்போது ஒளிச்சேர்க்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பயிரின் உற்பத்தி ஆகியவற்றை கணிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி குழு 20-ஆம் நூற்றாண்டின் போது ஏற்பட்ட காலநிலை மாறுபாட்டினை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மை காலம் வரை தாவரங்கள் குறுகிய கால சோதனைகளின் அடிப்படையில் co2 வை பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒளிச்சேர்க்கையின் மாற்றத்தின் முக்கிய அடிப்படை உயிர்வேதியியல் தோற்றமாகும். இதனை பற்றி 1890 மற்றும் 2012 –ம் ஆண்டிற்கு இடையே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் புதிய தாவரங்கள், மற்றும் பழைய மூலிகை பூங்காக்களில் வளர்ச்சிதை மாற்றங்களை ஒப்பிட்டு அதன் மூலம் NMR நிறமாலையினை பயன்படுத்தி ஒரு புதிய முறையை உருவாக்கியது. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் குளுக்கோஸ் உள்மூலக்கூறு ஐசோடோப்பு வடிவங்கள் மூலம் co2 அளவினை பற்றி ஆய்வு செய்து வந்ததில் வளர்ச்சிதை மாற்றம் பாய்மங்களின் மாற்றத்தால் இணைக்கப்பட்டிருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.sciencedaily.com/releases/2015/12/151207164333.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli