Skip to content

Co2 தாவர வளர்ச்சியினை அதிகரிக்கிறது

தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியம் கார்பன் – டை –ஆக்ஸைடு ஏனெனில் மனிதன் வெளியிடும் co2 வை தன்னுள் ஈர்த்து வளிமண்டலத்தினை பாதுகாக்கிறது. இதனை பற்றி ஆய்வு மேற்கொண்ட University of Minnesota ஆராய்ச்சியாளர்கள் தாவர வளர்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கியமான பங்கு co2 –விற்குதான் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

உலக தாவர வளர்ச்சி தற்போது co2 -வினால் அதிகரித்துள்ளது என்று தகவலறிக்கை கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் தாவரத்தின் வளர்ச்சியில் அபரிவிதமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போதைய இந்த ஆய்வின் மூலம் மனித நடவடிக்கையினால் ஏற்படும் co2 பாதிப்பினை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் இரண்டு முக்கியமான செயற்கைகோள் முடிவுகள் co2 வளிமண்டலத்தை பாதிக்கும் என்றும் இதனால் உலகம் வெப்பமடையும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பு தாவர வளர்ச்சிக்கு co2 தான் உதவி புரிகிறது என்று கூறப்படுகிறது. இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிந்துகொள்ள பல்வேறு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க புவியியல் ஆய்வு விஞ்ஞானியான சாஷா ரீட் தற்போது புதிய கருவிகளை கொண்டு ஆராய்ச்சி செய்யப்போவதாக கூறியுள்ளார்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151207113841.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj