Queensland University of Technology-ன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலக காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பினை சரிசெய்ய புதிய வழிமுறையினை கண்டுபிடித்துள்ளனர். உலகில் உயிர்தெழுதல் தாவரங்களில் முதன்மையானதாக இருப்பது புல், இது புத்துயிர் பெறும் தாவர வகையினை சார்ந்தது. புல் நன்றாக காய்ந்து விட்டாலும் பிறகு மழை வரும் காலங்களில் நன்றாக வளர்ந்து விடுகிறது. புல்லின் மரபணு மாற்றம் மிகுந்த பயனை புதிய புல்லிற்கு அளிக்கிறது.
இதற்கு காரணம் ஒழுங்குமுறையில் தாவர செல்கள் மறுசுழற்சிக்கு அனுமதிக்கும் செயல்முறையாகும். ஏன் இது மட்டும் இவ்வாறு செய்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தபோது புல்லில் குறைந்த சர்க்கரை அளவு இருப்பதாலே இது சாத்தியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த புல் வகை மரபணுவினை பயன்படுத்தி கொண்டைக்கடலை மற்றும் நெற்பயிர்களுக்கு புதிய வகை வளர்ச்சி நிலையினை ஏற்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போது உலக வெப்பமயமாதலால் எதிர்கால பயிர் வகைகளை நன்கு வளர்ப்பதற்கு இந்த புதிய திட்டம் கண்டிப்பாக உதவும்.
http://www.sciencedaily.com/releases/2015/12/151204111353.htm#
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli