விஸ்கான்சனிலுள்ள ஏரிகள், நீர் வழிகள் மற்றும் நிலத்தடி நீர் மிகவும் சுத்தமானதாக உள்ளது, என்று காலநிலை திட்ட பல்கலைக்கழகம் மற்றும் University of Wisconsin ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. இயற்கை முறையிலான அமைப்பில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் தண்ணீரும் மிகவும் சுத்தமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி சுத்தமான தண்ணீர் மூன்று வழிகளில் கிடைக்கிறதாம்.
- மேற்பரப்பு நீர்
- நிலத்தடி தரம்
- நிலத்தடி நீர் வழங்கல்
ஆகியவை ஆகும். பெரும்பாலும் மேற்பரப்பு நீரின் தரத்தை பொருத்தே சுத்தமான நீர் நிலத்தடியில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கை முறைப்படி உள்ள நிலங்களிலேயே பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் கொண்ட நீர் நிலத்தில் உருவாகும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையாகவே வடிவமைந்துள்ள ஏரிகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் அதிக சத்துடன் காணப்படும். இதற்கு காரணம் மழை தண்ணீர் நல்ல இயற்கை நிலத்துடன் மண்ணினை அரித்து எடுத்து வந்து ஏரிகள் மற்றும் நீரோடைகளில் வந்து சேர்ப்பதே ஆகும். அதுமட்டுமல்லாது இயற்கை நிலத்தில் அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் பயிர் விளைச்சல் அதிகமாகும். மேலும் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி 60% விளைச்சல் பாதிப்பு, மேற்பரப்பு நீரின் தரம் குறைந்ததே என்பது தெரிய வந்துள்ளது. இதனை தவிர்க்க நகர்புற பகுதிகளில் மழை தோட்டங்கள் அல்லது பூங்காக்கள் அமைத்தால் கண்டிப்பாக நிலத்தடி நீரினை சுத்தமான நன்னீராக நாம் மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.sciencedaily.com/releases/2015/11/151117181245.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli