Skip to content

வெப்ப மண்டல தாவரத்திற்கு தவறான பெயர்கள்

1970-ம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை உலகில் தாவரங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன்படி 50% வெப்பமண்டல தாவர மாதிரிகளுக்கு தவறுதலான பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். கடந்த 50 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகள் மிக அதிகமாக உள்ளது. இதில் வெப்ப மண்டல பகுதியில் இருந்த தாவரங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்கள் தவறான பெயர்களை வைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இயற்கை வரலாற்றை திருப்பி போடும் வகையில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பால் பல்வேறு பின்  விளைவுகள் ஏற்படலாம். இருந்தாலும் இதனை பற்றி ஆராய்ச்சி செய்தே தீருவோம் என்று Oxford பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முனைப்புடன் உள்ளனர். சுமார் £500 செலவீட்டில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆராய்ச்சியாளர்கள் குழு தாவர வகை தொகுப்பியலுக்கான புதிய ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை ஆய்வு செய்வதன் மூலம் வெப்ப மண்டல பகுதியில் உள்ள தாவரத்தின் வகைகளை மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் என்பது தெரிகிறது.

http://www.sciencedaily.com/releases/2015/11/151116142438.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj