University of Edinburgh ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர்களின் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய வகை பச்சை பாசியினை வைத்து ஆராய்ச்சி செய்தததில் அந்த பாசியின் செல்களை பயிர்களுக்கு பயன்படுத்தினால் பயிரின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் என்று நிரூபித்துள்ளனர். இதனால் கோதுமை, அரிசி மற்றும் பார்லி பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியளர்கள் கூறுகின்றனர். இவர்கள் கண்டறிந்த ஆல்கா வகை செல்கள் ஒளிச்சேர்கையின் போது கார்பன்-டை-ஆக்ஸைடை அதிக அளவில் குறைக்கிறது. இதனால் பயிர் மிக விரைவில் வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல மூலப் பயிர்களில் கிட்டதட்ட அனைத்து காய்கறிகளிலும் குறைந்த அளவு ஒளிச்சேர்க்கையே தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனால் கார்பன்-டை-ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் பணி இந்த வகை பயிர்களுக்கு மிக கடினமான செயலே. ஆனால் ஆல்கா வகை செல்கள் கொண்ட பயிர்களில் அதிக அளவு ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. அதனால் இந்த பாசிகள் காணப்படும் பகுதிகளில் இயல்பாகவே பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் மேலும் புகையிலை மற்றும் கிரேஸ் தாவரங்களை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதனுடைய வளார்ச்சியிலும் பச்சை பாசியின் பங்கு அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இது போன்ற பச்சை பாசிகளை கோதுமை நெல் பயிரிடும் பகுதிகளில் பயன்படுத்தினால் கண்டிப்பாக அதனுடைய மகசூல் இரட்டிப்பாகும் என்று ஆராய்ச்சியளார்களில் ஒருவரான டாக்டர் அலிஸ்டர், மெக்கர் மிக் உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மாநாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்.
http://www.sciencedaily.com/releases/2015/11/151116112048.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli