Skip to content

மத்திய சீனாவில் 1300 வருடங்கள் பழைய மரம்

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பூர்வீக மரங்களை கணக்கெடுப்பு செய்யும் போது இந்த மரத்தை கண்டறிந்துள்ளனர். இந்த மரத்திற்கு 1,300 க்கும் மேற்பட்ட வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது அரியவகை இனத்தை சேர்ந்த மரம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

taxus chinensis tree கரும்பச்சை இலைகளை கொண்ட மரங்களின் வகையை சார்ந்த மரமாகும். இந்த மரம் Yongzhou நகரத்தில் Dong’an உள்ளூரில் உள்ள Shunhuangshan தேசிய வனப்பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

2

இந்த மரம் 35 மீட்டர் உயரம் மற்றும் 2.2 மீட்டர் விட்டம் கொண்டுள்ளது என்று மாவட்ட வனவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். taxus chinensis tree இருபுறங்களிலும் இரண்டு துணை கிளைகளாக பிரிந்து உள்ளது.

பண்டைய அனைத்து மரங்களையும் உள்ளூர் கிராமவாசிகளால் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு நடத்தும் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3

taxus chinensis tree 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருந்ததால் இது ஒரு ஆபத்தான மரம் என்று கூறுகிறார்கள். இது சில விதைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் மற்றும் இது வெப்பமும் ஈரப்பதமும் உள்ள இடங்களில் மட்டுமே வளரக்கூடியதாகும்.

பொதுவாக இது புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. அழிந்து வரும் தாவர இனங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

http://www.ndtv.com/world-news/1-300-year-old-tree-found-in-central-china-1240609

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj