சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது.
இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில் ஒரு சதவீதத்தை தோட்டக்கலைக்காக அரசாங்கம் செலவு செய்வதாக கூறியுள்ளது.
இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தில் பெருந்தோட்டம் அமைத்தல், பழைய தோட்டத்தை மாற்றியமைத்தல், தோட்டங்களை அழகுபடுத்துதல் மற்றும் பாராமரித்தல் ஆகியவை அடங்கும் என்று சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 5000 கோடி ஆகும். இந்த ரூ. 5000 கோடி பணத்தில் ஒரு சதவீதம் தோட்டக்கலைக்காக ஒதுக்கப்படும் என்றும் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 500,000 மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
Thank you