Skip to content

மாகா வேரின் நன்மைகள்!

மாகா வேரில் நிறைய சுகாதார நன்மைகள் உள்ளன. இயற்கை வைத்தியத்திற்கு மாகா வேரை பயன்படுத்துகிறார்கள். இந்த மாகா வேர் ஆண்டிஸ் மலைத்தொடர் , முக்கியமாக பெருவில் தான் காணப்படுகிறது. இந்த வேர் அதிகமாக மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. கடும் வெப்பநிலை மற்றும் பனி இருந்தபோதும் செழித்து வளரும் தன்மை வாய்ந்தது.

இந்த மாகா தாவரம் கடுகு தாவரத்தை தொடர்புடையது. மாகா வேரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த மாகா தாவரத்தின் ரூட் அல்லது கிழங்கில் அதிகமாக  புரதம், இயற்கை சர்க்கரை, இரும்பு, பொட்டாசியம், அயோடின், மக்னீசியம், கால்சியம், மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

16 (1)

மாகா வேரின் மருத்துவ குணங்கள்:

சரும பராமரிப்பு:

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முகப்பரு போன்ற சரும பிரச்சனைக்கு மாகா வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மனச்சோர்வு:

மாகா வேர் சோர்வை விடுவிக்கும் தன்மை கொண்டது. இந்த வேரை பயன்படுத்தினால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுத்தாமல் உடலில் ஏற்படும் சோர்வை குறைக்கின்றன.

17 (1)

ஆற்றல் மற்றும்  சகிப்புத்தன்மையை இந்த  மாகா வேர் அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இரத்த சோகை, எலும்புருக்கி நோய், எலும்புமெலிவு, மற்றும் வயிற்று புற்றுநோய் போன்றவற்றுக்கு  உதவுகிறது.

புண் மற்றும் இரத்த சோகைக்கு இந்த வேர் மிகவும் உதவியாக இருக்கிறது.

http://www.herbwisdom.com/herb-maca.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj