சூரியகாந்தி விதையின் உமியை பயன்படுத்தி, குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை குறைப்பதன் சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கான்கிரீட் வளம் மற்றும் ஆற்றல் மிக்கதாகும். அதனால், ஆராய்ச்சியாளர்கள் மாற்று கலப்படங்கள் (கழிவு ரப்பர், கண்ணாடி தூள் மற்றும் காகித கழிவுகள் நீர்) போன்றவற்றை பயன்படுத்தி முயற்சி செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்தது எதிர்மறையாக பாதித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தாவர எண்ணெய் மற்றும் உணவு தொழிற்சாலையில் இருந்து வரும் சூரியகாந்தி விதையின் உமி கழிவு அதிக அளவு உள்ளன. அதனால் உணவு தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதுமையான கண்டுபிடிப்பு கலவையை, போக்குவரத்து மற்றும் கட்டுமானம் போன்ற தொழில்களில் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள். விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதாலும் மற்றும் வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருட்களின் பற்றாக்குறையாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கான்கீரிட் கலவையின் முறை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தொழிற்சாலை கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்ற பொறியாளர்கள் புதிய வழிகளை கண்டுபிடித்து வருகிறார்கள்.
சூரியகாந்தி விதை உற்பத்தி செய்வதில் துருக்கி தான் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக இருந்து வருகிறது. 584.000 ஹெக்டேரில் கிட்டதட்ட ஒரு மில்லியன் டன்கள் சூரியகாந்தி விதைகள் உருவாக்கப்படுகிறது. அதனால் சூரிய காந்தி விதையின் கழிவு அதிகமாக இருப்பதால் இந்த கழிவை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தோராயமாக 300000 டன் விதை உமி கழிவு வருகிறது. அதனால் இந்த விதை உமியை கான்கிரீட் கலவையில் கலக்கி உபயோகிக்க பரிசோதனை செய்து வருகிறார்கள்.
http://www.greenoptimistic.com/sunflower-seed-husks-used-to-improve-concrete-20130503/#.VgI5kdKqqko
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli