ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள்.
வளமான மண்ணாக மாற்றுவதற்கு அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து சாம்பலாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விட இந்த முறையில் மாசுப்பட்ட மண்ணை வேகமாக சரி செய்ய முடியும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர் பேடரோ ஆல்வரெழ் கூறினார்.
எண்ணெய் கசுவுகள் உள்ள மண் மற்றும் மாசுப்பட்ட மண் போன்றவற்றில் இருந்து வளமான மண்ணை மாற்றுவதே எங்கள் நோக்கமாக இருந்தது என்று ஆல்வாரெஸ் மற்றும் மற்றும் ரைஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறச்சூழல் பொறியியல் துறை தலைவர் ஜோர்ஜ் ஆர் பிரவுன் கூறினார்கள்.
வருடத்திற்கு 98% எண்ணெய் கசிவுகள் நிலத்தில் ஏற்படுகிறது. அதனால் தொழிற்துறை மற்றும் அரசாங்கங்கள் , உலகம் முழுவதும் எண்ணெய் சிதறல்களை சுத்தம் செய்ய ஆண்டிற்கு $ 10 பில்லியன் பணத்தை செலவிடுகிறது என்று ஆல்வெர்ஸ் கூறினார்.
ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வேதிவினை (பைரோலிஸிஸ்) பயன்படுத்துவதன் மூலம் மாசுப்பட்ட மண்ணை 3 மணி நேரமாக சுத்தம் செய்கிறார்கள்.
பெட்ரோலிய ஹைட்ரோகார்பன்கள் அளவு மட்டும் குறைக்கப்படுவதில்லை, அளவுகோல் (எடையிலிருந்து 0.1 % -க்கு ) குறைவாக குறைக்கப்படுகிறது. மீதமுள்ள கார்பனை எரிப்பதன் மூலம் மண் வளம் மேம்படுத்தப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli