Site icon Vivasayam | விவசாயம்

பிரண்டை அலோபதி மற்றும் சித்த மருத்துவ பயன்கள்

பிரண்டை
(Vitis Quadrangularis).

எலும்பு
எலும்புக்கு வலு சேர்க்கிறது, இதில் இருக்கக்கூடிய எலும்பு செல்கள் (osteoblast) உருவாக்கி எலும்புக்கு வலு சேர்க்கிறது.  Osteopenia என்ற எலும்புருக்கி நோயை குணப்படுத்துகிறது
வயோதிகத்தால்  பெண்களுக்கு வரக்கூடிய  எலும்பு பலவீனத்தை (Osteoporosis)குணப்படுத்துகிறது. மேலும்  உடலில் உள்ள எலும்புகள் மற்றும் மூட்டுகளை ( Rhemuatoid Arthritis) வலுப்பெற செய்கிறது

பல்
கால்சியம் அதிகமாக உள்ளதால் பற்சிதைவுகளில் இருந்தும், பல் உடைவதில் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் பற்களை பலப்படுத்துகிறது

புண்கள்
காயங்களை விரைவில் ஆறச்செய்கிறது
எலும்புகளையும், எலும்பு முறிவுகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.புண்களால் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது. வலிகளையும் குறைக்கிறது

வளர்சிதை மாற்றம்
வளர்சிதை மாற்றத்தினை சீர்செய்கிறது, அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் , உடற் பருமன் , இருதய நோய் வராமல் தடுக்கிறது

புற்று நோய்

எலும்பு சம்பந்தமான புற்று நோயையை பிரண்டை தடுக்கிறது

வயிற்று நோய்கள்

பசியின்மை( Anorexia), வயிற்றுப்புண் (Peptic Ulcer),ஜீரண குறைபாடு இவைகளையும் சரி செய்கிறது

சித்த மருத்துவம்
..
(Vitis Quadrangularis).

பிரண்டையைநெய் யால்வறுத்துப் பின்பரைத்து மாதே
வெருண்டிடா தேற்று விழுங்கி-லண்டுவரு
மூலத் தினவடங்கு மூல விரத்தம றும்
ஞாலத்தி னுள்ளே நவில்.
—-சித்தர் பாடல்

கிராமங்களில் தோட்ட வேலிகளில் அதிகமாகக் காணப்படும் மூலிகையில் ஒன்றாக பிரண்டை விளங்குகிறது.
பிரண்டை வகைகள்
ஓலை பிரண்டை,
உருண்டை பிரண்டை,
முப்பிரண்டை,
சதுர பிரண்டை,
களி பிரண்டை,
புளி பிரண்டை,
தீம்பரண்டை என பலவகைள் உண்டு

மேற்கண்டவற்றில் முப்பிரண்டை மிகவும் அரிதானதாகவும் அதே சமயம் அதிக மருத்துவ குணங்களை கொண்டதாகவும் கருதப்படுகிறது. தண்டு, வேர் , பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது

தீரும் நோய்கள்

அஜீரண கோளாறு
வயிற்றுப்பொறுமல்
உஷ்ண வாயு
குன்மம்
இரத்த பேதி
அக்னி மந்தம்
இவைகள் குணமாகும்
இரத்த மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்
வயிற்று கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது, இதில் பிரண்டை உப்பு உடன் சேர்த்து மருந்து செய்து உண்டு வந்தால் வயிற்றில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும், இது எலும்பு முறிவை விரைவில் குணமடையச்செய்யும், வயிற்றில் உள்ள இரணங்களை ஆற்றும்

உண்ணும் முறை

மேலே கூறியுள்ள பிரண்டை வகைகளை தோலை நீக்கி நெய் விட்டு வதக்கி கொட்டை பாக்கு அளவு காலை, இரவு 10 முதல் 15 கிராம்உண்டு  வரை 15 நாள் உண்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்

பின் விளைவுகள்:
பிரண்டை பால், முத்திய பிரண்டை போன்றவை பக்க விளைவு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவரை ஆலோசித்துவிட்டு பயன்படுத்தவும்

மருத்துவர் பாலாஜி கனகசபை., M.B.B.S., PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002

Exit mobile version