Site icon Vivasayam | விவசாயம்

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள்

ஆவாரம் பூ செடியின் மருத்துவ பயன்கள்

ஆவாரம் பூ ஆசிய நாடுகளில் வறண்ட பகுதியில் இருக்கக்கூடிய ஒரு செடி வகையாகும் ,ஆவாரம் பூ செடியில் இலை, தண்டு, வேர், பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்கிவருவதை சித்த மருத்துவத்தின் மூலம் அறியலாம்

ஆவாரை பூ பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது சித்தர்கள் வாக்கு

மருத்துவப்பயன்கள்

ஆவாரம் செடியில் இலை மற்றும் பூ வில் உள்ள Aqueos extract போன்ற வேதிப்பொருட்கள் கணையத்தை நன்கு சுரக்கச் செய்து சர்க்கரை நோய்க்கான(Diabetic Melitus) மருந்து எடுத்துக்கொண்டவர்களை விட ஆவாரம் பூ உடன் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோயின் அளவு வெகுவாக குறைகிறது.

ஆவாரம் செடியில் இலை மற்றும் பூ வில் உள்ள வேதிப்பொருட்கள் செல்களின் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குப்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இது ஆன்டாக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.

ஆவாரம் பூவில் இருக்கக்கூடிய அல்காய்ட்ஸ், ஸ்டிராய்ட்ஸ், முடக்குவாதம், Antiarthritic, OA, rheumatism, மூட்டு வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

பேதிக்கு(Dysentery)  மருந்தாகவும், வயிற்றில் இருக்கக்கூடிய புண் (ulcer), வயிற்று வலி(Abdoman pain) , வயிற்றுப்புழுவை நீக்கவும்  மருந்தாக பயன்படுகிறது.

ஆவாரம் பூ கண்ணில் உள்ள வீக்கம் (Conjunctivitis) ஆகியவற்றை குணப்படுத்துகிறது, கண்ணில் இரணம் வருவதை தடுக்கிறது.

ஆவாரம் பூ மேற்பூச்சாக பயன்படுத்தும்போது இரணத்தை ஆற்றுகிறது. உடல் மேனி அழகுப்படுத்தவும் பயன்படுகிறது.

சிறுநீர் தொற்றை Urinary Track Infection(குணப்படுத்துகிறது. சிறுநீரகத்தைப் பலப்படுத்துகிறது

வேதிப்பொருட்கள்

பூ
flavonoids and phenols,tannin, terpenoids, alkaloids, carbohydrates and steroids

இலை
Twenty-nine compounds were identified in the leaves of C. auriculata. The main constituents are 3-OMethyl-dglucose (48.50%), α- Tocopherol-β-D-mannoside  (14.22%), Resorcinol (11.80%), n-Hexadecanoic acid (3.21%), 13-Octadecenal, (Z) – (2.18%) and 1, 2, 3, 4- Tetrahydroisoquinolin-6-ol-1-carboxylic acid (1.98%) [

தண்டு
two new triterpenoid glycosides

ஆவாரம் செடி சித்த மருத்துவம்

(Cassia Auriculata Flower) தங்க மெனவே சடத்திற்குக் காந்திதரு மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா மாவு கற்றாழை மணத்தை யகற்றிவிடும் பூவைச்சே ஆவாரம் பூ.
– சித்தர் பாடல்

ஆவாரம் பூ மேக நீர் நோய்(  நீரிழிவு நோய்), வறட்சி,  உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.

இரத்த மூலம் , பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு, உட்காயம், குடல்புண், சிறுநீர் எரிச்சல் நீங்கும் , தாகத்தை கட்டுப்படுத்தும், சளி மற்றும் ஆஸ்துமா, மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்துகிறது

பயன்படுத்தும் முறை

ஆவாரம் பூவை நிழலில் உணர்த்தி அரைத்து, 2-5 கிராம் , 250 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து சுண்டியபின் பனைவெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சிறிது சேர்த்து காப்பி போல தினமும் அருந்தி வரலாம்

ஆவாரம் பூ பொடியை ஒரு 2-5 கிராம் எடுத்து பாலில் போட்டு, பாலை நன்கு கொதிக்க வைத்து அருந்தினால் டீ போல அருமையாக இருக்கும்

இவ்வாறு செய்தால் நோய் எதிர்ப்பு நன்கு அதிகரிக்கும், வைரஸ் காய்ச்சலை கூட குணப்படுத்தும் தன்மை கொண்டது

பூவை உலர்த்தி, நலங்குமாவுடன் தேய்த்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் கற்றாழை துர்நாற்றம், உப்பு பூப்பது போன்றவை நீங்கும், தோள் பளபளப்பு ஏற்படும்
உடலுக்கு நல்ல தேஜஸ் கொடுக்கும்.

ஆவாரம் பஞ்ச சூரணம்
ஆவாரம் இலை, பூ, பட்டை  , வேர் , காய் இவை சேர்த்து சூரணம் செய்து 5 கிராம் காலை இரவு உண்டுவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்
உடல் காய சித்தி பெறும்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS, PhD(yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002

Exit mobile version