Site icon Vivasayam | விவசாயம்

பசுவின் வெண்ணெய் பலன்கள்: மருத்துவர் K M பாலாஜி கனக சபை

வெண்ணெயில் உள்ள சத்து விபரங்கள்

http://nutrition.agrisakthi.com/detailspage/BUTTER/283

பண்டையக்காலத்தில் இருந்து நம் நாட்டில் உணவுப்பொருளாகவும், மருந்துகளை தயார் செய்யவும், பசுவின் வெண்ணெய் பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில்

1.வெண்ணெய் 100 கிராம்  சாப்பிட்டால் 729(கலோரி) சக்தியை உடம்பிற்கு கொடுக்கும் கொண்டது, அதிக நல்ல கொழுப்பு HDL மற்றும் ஒமேகா 6 , Fatty Acid இருப்பதால் உடலுக்கு பலம் சேர்க்கிறது

2.இருதய நோய் உள்ளவர்கள் வெண்ணெயை எடுத்துக்கொள்ளலாம் ( மருத்துவரின் ஆலோசனைப்படி)

3.இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும், பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது

4.இதில் இருக்கும் கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பல்களுக்கு வலு சேர்க்கிறது, மற்றும் வயோதிகத்தினால் வரக்கூடிய osteoporosis என்ற எலும்பு வராமல் தடுக்க உதவிகிறது,

5.உடல் எடை குறைப்பவர்களுக்கும் வெண்ணெய் மிகுந்த பயனளிக்கிறது

6.அதிக பசி எடுப்பவர்கள் வெண்ணெய் கலந்த உணவோ அல்லது பட்டர் டீ எடுத்துக்கொண்டால் பசி குறையும், நீண்ட நேரம் பசியில்லாமல் ஆரோக்கியத்துடன்  இருக்க முடியும்

7.வெண்ணெயில் உள்ள ஆன்டாக்சிடென்ட்ஸ் , புற்று நோயை வராமல் தடுக்கவும், கட்டிகள், வீக்கங்களை குணப்பத்த உதவுகிறது

8.வறண்ட சருமத்திற்கு வெண்ணெயை பூசுவதன் மூலம் குளிர்க்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமம்,  தோல் வெடிப்பு, பித்த வெடிப்பு போன்றவை குறையும்

9.வயிற்றில் உள்ள குடல் இயக்கத்தை சரி செய்து மலச்சிக்கலை போக்குகிறது, எனவேதான் பழங்காலத்தில் குழந்தைகளுக்கு சிறிதளவு வெண்ணெய் கொடுத்து வந்தனர், இதனால் உடல் பலம் பெற்று இருந்தனர்
இவர்களுக்காகத்தான் கண்ணன் வெண்ணெய் உண்டான் என்ற கதை வந்தது போல

சித்த மருத்துவம்

பசுவெண்ணெய்க் குணம்
கண்ணி லெழுநோயுங் கண்ணெரிவும்
பீளையும்போ
மெண்ணும் பசியு
மெழும்புங்காண்-நண்ணரிய
ஆவினறும் வெண்ணெய்க் ககலும்வன்
மேகமெல்லாம்
பூவினர்க் கெல்லாம் புகல்.

பசுவின் வெண்ணெய் க்கு கண்ணோய், கண்ணெரிச்சல், பீளை சாரல், பிரமேகம்
இவை போகும்,  பசியும் உண்டாகும்

உண்ணும் முறை

சமைக்கும்போது எண்ணெய்க்குப் பதிலாக  இரண்டு தேக்கரண்டி வெண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம்

50 கிராம் சுத்தமான கடைந்த பசு வெண்ணெயை நேரடியாக சாப்பிடலாம் தினமும்

சத்தான பட்டர் டீ

பசும் பால் –  100மிலி
வெண்ணெய் – 25-30 கிராம்
டீ தூள் – 2 டீஸ்பூன்
தேவையென்றால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்

செய்முறை:

முதலில், பால் பாத்திரத்தில் பால், தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
பால் பொங்கி வரும்போது பட்டர், டீ தூள் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

டீத்தூளின் சாறு முழுவதும் பாலில் இறங்கியதும் இறக்கிவிடலாம். தேவைப்படுபவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

பட்டர் காப்பி

பசும் பால் –  100மிலி
வெண்ணெய் – 25-30 கிராம்
காப்பி தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணேய் – ஒரு ஸ்பூன்
தேவையென்றால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்
பால் பாத்திரத்தில் பால், தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.

பால் பொங்கி வரும்போது பட்டர், காப்பி தூள், பின் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

காப்பித்தூளின் சாறு முழுவதும் பாலில் இறங்கியதும் இறக்கிவிடலாம். தேவைப்படுபவர்கள் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

வெண்ணெய் அதிகமாகச் சாப்பிட்டால் அஜீரணமாக வாய்ப்புண்டு, பசியின்மை ஏற்படும்  எனவே தேவைக்கேற்ப பயன்படுத்தவும், நோயாளிகள் மருத்துவரை ஆலோசித்து பயன்பெறவும்

மருத்துவர்  K M பாலாஜி கனக சபை
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002

Exit mobile version