யானை நெருஞ்சில் என்ற மூலிகை தெற்காசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையாகும். இது சிறுநீரம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது.
இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர் , தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது, சிறுநீரக் கல் (Anti-nephrolithiatic) இருக்கும் பட்சத்தில் எதை வெ ளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல் ,அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.
இதன் சாறு சிறுநீரகத்தில் உருவாகும் Streptococcus progeny, Enterococcus faccalis, gram negative ஆகிய பாக்டீரியாக்களை (Antibacterial ) அழிக்கிறது. சிறுநீரகத்தை (Nephroprotective activity) பாதுகாக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கான gonorrhoea போன்ற நோய்களை குணப்படுத்தும்.
உடலில் உள்ள அதிக்கொழுப்புகளை குறைத்து இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை (Anti-hyperlipidemic activity) தடுக்கிறது.
வயிற்றில் ஏற்படக்கூடிய புண்ணை (Anti ulcer )குணப்படுத்துகிறது. மேலும் உடலில் வலி , வீக்கம்(Anti-inflammatory) ஆகியவற்றை சரி செய்கிறது.
இது நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கி செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சீர்படுத்தி Antioxidant ஆக செயல்படுகிறது.
கல்லீரலை (Hepato protective) பலப்படுத்தி சீராக வைக்கிறது.
பிராஸ்டேட் வீக்கம்
ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.
பாலுணர்வு குறைபாடை (Aphrodisiac) சீர் செய்கிறது
யானை நெருஞ்சில், (Pedalium Murex).
மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந் தானுிக்குக்
தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்கா-கைத்தாந்
தேனையரும் பாகைத் திருத்துங் கிளிமொழியே
யானை நெருஞ்சிலது.
சித்தர் பாடல்
உடலை குளிர்ச்சிப்படுத்தும், வெள்ளைப்படுதல் , வெண் குஷ்ட ரோகம், உடல் எரிச்சல், தாகம், பித்த மயக்கம் இவைகளைப் போக்கும்.
உண்ணும் முறை
இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு , 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும் . மேலும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.
யானை நெருஞ்சில் காயை காய வைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல் , வெள்ளைப்படுதல், தேக எரிச்சல் நீங்கும்.
இதன் இலையை இடித்து சூரணம் செய்து இரண்டு வேளைப்பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும்.
இதன் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் சிறுநீரக, எரிச்சல் , விந்து நீர்த்துப்போதல் , சிறுநீர் போகும்போது வலி , ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்
மருத்துவர் பாலாஜி கனக சபை, MBBS, PhD (Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002