Site icon Vivasayam | விவசாயம்

இஞ்சி அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் முறை

இஞ்சி,
(Zingiber office nellie. Raw).

சத்து விபரங்கள்

http://nutrition.agrisakthi.com/detailspage/GINGER,%20FRESH/299

அலோபதி மருத்துவம்

அஜீரணக்கோலாரை சரி  பண்ணும், உடல் வலி (Myalagia) குறைக்கும், ஆன்டிஇன்பிளமேட்டரி(anti inflammatory), Anti Anagesic இருப்பதால் சிறந்த வலி நிவராணியாகவும் இருக்கிறது, மறதி நோய்க்கும் என்ற அல்சைமர் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது

இதில் ஆன்டிஆக்சிடன்ஸ் இருப்பதால் செல்களின் வளர்சிதை மாற்றத்தை சீர்படுத்தி வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.மற்றும் இருதய நோயை தடுப்பதற்கும் பயன்படுகிறது.

பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக இருப்பதால் நாவறட்சி, உடல்சோர்வு , ஐபோகெலிமீயா எனப்படும்  தாது குறைபாடும் நீங்குகிறது

மேலும் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது,

டிரிப்சீன் , பான்கிரியாட்டிக் லைபேஸ்  இந்த என்சைம்கள் குடல் இயக்கத்தை ஓழுங்குபடுத்துவது மலச்சிக்கல் தீர்கிறது

மேலும்  குடல் புற்றுநோயும் தடுக்கப்படுகிறது.

பெண்களுக்கு

மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வயிற்று வலியை இது குறைக்கிறது. இரும்பு சத்தும் உள்ளதனால் ரத்தசோகையையும் குணப்படுத்தும்
பெண்களுக்கு வரக்கூடிய மூட்டுவலி(ஆத்தரைடிக்ஸ்) குணப்படுத்துகிறது.
கொழுப்பு இல்லாததானல் உடற்பருமன் குறைப்பதற்கு  இஞ்சி முக்கிய பங்கு ஆற்றுகிறது.

சித்த மருத்துவம்

இஞ்சி யதனுக் கிருமலைய மோக்காளம்
வஞ்சிக்குஞ் சந்திசுரம் வன்பேதி – விஞ்சுகின்ற
தலையறும் வாதம்போக் தூண்டாத தீபனாராம்
வேலையுறுங் கண் ஹய் ! விளம்பு.
— சித்தர் பாடல்

சித்தமருத்துவத்தில் இஞ்சியை கற்ப மருந்தாக பயன்படுத்தலாம், காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டத்தில் உண்டால் உடல்காய(உடல்பலம்) பெறும் அடையும்

மேலும் சூலைநோய், வாதம், பீனிசம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மேலும் குண்மம் (வயிறு எரிச்சல், வயிற்றுப்புண்) இவைகளுக்கு தேனுடன் 50கிராம் இஞ்சிச்சாறு கலந்து காலையில் 48 நாள் உண்டுவந்தால் வயிற்றுப்புண் குணமாகும்

முடக்குவாத நோயையும் குணப்படுத்தும், விந்து பெருக்கி ஆண்மையை அதிகரிக்கிறது.  இஞ்சியை சித்த மருத்துவத்தில் பிற மருந்துகளுடன் துணை மருந்து மற்றும் அனுபானமாகவும் பயன்படுத்திவருகின்றனர்

இஞ்சி உண்ணும் முறை :

இஞ்சி புறநஞ்சு, கடுக்காய் அகநஞ்சி என்பது சித்தர் கூற்று,  இஞ்சியை தோல் நீக்கி மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

இதில் ஒரு 30கி-50 கிராம் இஞ்சி துண்டை எடுத்து இடித்து சாறு பிழிந்து ஒரு குவளையில் சேகரித்துக்கொண்டால் மேலே உள்ள தௌிந்த நீரை மட்டும் வைத்துக்கொள்ளவும் , இதில் இரண்டு ஸ்பூன் மலைத்தேன் /தேன் சேர்த்து காலையில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும், மேலே உள்ள பயனை பெற இயலும்
இது அனைத்து சிற்றுண்டி மற்றும் டீ உணவுப்பொருட்களில் சேர்த்துக்கொண்டால் நன்மை பயக்கும் மற்றும் அந்த உணவு நன்கு செரிக்கவும் உதவும்

சாப்பிடக்கூடாதவர்கள்:

சிறுநீரக் கல்,  இரைப்பை புற்றுநோய் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்தபின் உண்ணவும்
இரத்தப்போக்கு நோயுள்ளவர்கள், தொண்டைப்புண் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS., PhD
அரசு மருத்துவர், கல்லாவி
99429-22002

Exit mobile version