Site icon Vivasayam | விவசாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனிகளை தகுந்த விலைகொடுத்து வாங்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மாவட்ட விவசாயிகளின் துயரை போக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை நம்பியே, மாங்கூழ் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது, மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொடர்ந்து தகுந்த விலை கொடுக்காமல் மா விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் தரும் மா மரங்களை பராமரிப்பது மிகவும் கடினமாகவும், அதிக செலவும் செய்ய வேண்டியுள்ளது. பூச்சித் தாக்குதல், பருவநிலை மாற்றம் என 5 ஆண்டுகளாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகின்றது. மகசூல் பாதித்தாலும், மாங்கனிகளுக்கு சிண்டிகேட் மூலம் விலை நிர்யணம் செய்வதால், விவசாயிகளுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் இப்படியெல்லாம் வேதனைப்பட்டு மா விவசாயத்தை மேறகொண்டாலும்
மே மாதம் முதல் முதிர்ச்சியடைந்த மாங்கனிகள் அறுவடை செய்யப்பட்டு, மாங்கூழ் தொழிற்சாலைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

ஆரம்பத்தில் 1 கிலோ மாங்கனிக்கு 20 ரூபாய் என்கிற விலையில், மாங்கூழ் அதிபர்கள், மா விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். விவசாயிகள் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நடந்த, முத்தரப்பு கூட்டத்தில், ஒரு கிலோவிற்கு 20 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்த்துங்கள் என ஆட்சியரும் அறிவுறுத்தினார். ஆனால் மாவிற்கான விலையை உயர்த்துவதற்கு பதிலாக விலையை குறைத்து வருகின்றனர்.
இப்போது ஒரு கிலோ 12 ரூபாய் என்பதே பெரிய விலை என்று மா கூழ் உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மா விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். உள்ளூர் மாவிவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், வெளிமாநில மா விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்

 

தமிழக அரசு இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் சென்று முதலீடு கேட்கும தமிழக முதல்வர் உள்ளுர் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதும் அவரின் கையில்தான் உள்ளது.

Exit mobile version