Vivasayam | விவசாயம்

கற்றாழை மரம்

ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட கற்றாழை மரங்கள் (Tree aloe), அக்கண்டத்தின் தென் பகுதி மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை காடுகள் மற்றும் வறண்ட பள்ளத்தாக்குகளில் பரவலாக காணப்படுகின்றன.
             இவை 20 முதல் 60 அடி உயரம் வரை வளர்கின்றன. கற்றாழை வகை செடிகளில் மிக உயரமாக வளர்வது இம்மரங்கள் தான். ஒவ்வொரு கிளையின் நுனியும் ஒரு சோற்றுக்கற்றாழை செடியை போலவே இருக்கும். இம்மரத்தில் குளிர்காலத்தில் கூம்பு வடிவில் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூக்கின்றன. இப்பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேன் சிட்டுகள் உதவுகின்றன.
           கற்றாழை மரத்தின் தாவரவியல் பெயர் ஆலோய்டென்ட்ரான் பார்பரே (Aloidendron Barberae). இத்தாவரத்தை முதன் முதலில் கண்டறிந்த மேரி எலிசபெத் பார்பர் பெயராலேயே இவை அழைக்கப்படுகின்றன. 
            இவற்றில் ஹெர்குலிஸ், ரெக்ஸ், கோலியாத் உள்ளிட்ட பல கலப்பினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும்பூங்காக்களில் அழகுக்காக இம்மரத்தை வளர்த்து வருகின்றனர். பெரிய தண்டுடன் கூடிய இம்மரங்களின் வேர்களும், கிளைத்து வளர்வதால் கட்டிடங்கள் மற்றும் குழாய் இணைப்புகள் அருகில் வளர்க்காமல் இருப்பது நல்லது.
முனைவர். வானதி பைசல்
 
விலங்கியலாளர்
Exit mobile version