தக்காளி சமீபத்தில் மிகப்பெரிய பேசு பொருளானது. தமிழ்நாட்டில் தினமும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்பதே நிதர்சனம். தக்காளி விலை உயர்வு அனைவரையும் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் இந்த விலை உயர்வுக்கான காரணத்தை நாம் தெளிவாக அறிய வேண்டும். நாம் முகநூல் சமூகவலைதளங்களில் கிண்டல் கேலி மற்றும் வசைகளை பொழிகிறோம். ஆனால் உண்மை காரணம் மற்றும் அதை தடுப்பதற்கு நீண்ட கால தீர்வை பற்றி பேச மறுக்கின்றோம். தக்காளி விலை உயர்வு 2021-ம் ஆண்டு பிரச்சனை மட்டும் அல்ல, பல ஆண்டுகள் இப்படி நடந்துள்ளது, வருங்காலங்களிலும் நடக்க வாய்ப்புள்ளது. வருங்காலங்களில் நடக்காமல் தடுக்க நாம் அ றிவி ய ல் வளர்ச்சியை, வேளாண்மையை நோக்கி முன்செலுத்த புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவை வேளாண்மைக்கும் பூவுலகுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தக்காளி உற்பத்தி பாதிப்பை பற்றி அறிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது விவசாயிகளிடம் கலந்துரையாடும் போது, அவர்கள் கூறிய செய்திகளை நாம் தொகுத்து பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் தொடர்ந்து படிக்க …
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil