இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகைக்கு `மிட்டாய் இலை’, ‘இனிப்பு இலை’ `சர்க்கரை இலை’ என பலப் பெயர்களும் உள்ளன. இதில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருட்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். உலக அளவில் Monk Fruit- க் கு அடுத்தப்படியாகச் சீனித்துளசியில்தான் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. இவை இரண்டில் மட்டுமே ஜீரோ கலோரி, ஜீரோ கார்போஹைட்ரேட் உள்ளன. இதனை கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
மேலும் தொடர்ந்து படிக்க …
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil