களை கட்டுப்பாடு
களைகள் என்பவை பயிருக்கு தேவை
இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள்,
சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும்
பயிருடன் போட்டியிட்டு மகசூலை
பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி
மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக
உள்ளதால் பயிரில் பூச்சி மற்றும் நோய்
தாக்குதலு க் கு மு க் கி யகாரணியாக
விளங்குகின்றன.
நெல் பயிரில் களைகளின் தாக்கம்
நெற்பயிரில் பிரதான களைகளாக புல்
வகைகளைச் சேர்ந்த குதிரைவாலி, மயில் கொண்டை, அருகம்புல் போன்ற களைகளும்,
கோரை வகைகளைச் சேர்ந்த ஊசி கோரை
மற்றும் வட்டக் கோரை வகைகளும் மற்றும்
அகன்ற இலை களைகளான நீர்முள்ளி,
வல்லாரை, ஆராகீரை போன்றவைகளும்
காணப்படு கின்றன. களைகள் உள்ள
பயிர்களின் மகசூல் பெருமளவில் குறைகிறது.
மேலும், பூச்சி மற்றும் நோய் தொற்றுவதற்கு
மூல ஆதாரமாக உள்ளதால், களைகளை
அகற்றிபயிரினை ஆரோக்கியமாக
பராமரிப்பது அவசியமாகிறது. களைகளை
கட்டுப்படுத்தவில்லை என்றால் 35 முதல் 45
சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு
வாய்ப்பு உள்ளது.
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil