அறிமுகம்:
கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு
செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக
செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர்
தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி
மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு
ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க
வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, ஒரு
சில தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி
முறைகளும் பார்க்கலாம்.
1. க ொழுக்கட்டைப்புல்:
பல்லாண்டுப் பயிராகப் பயிரிடலாம்.
மானாவாரி சாகுபடி மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கும் ஏற்றது. வறட்சியை தாங்கி
வளரக்கூடியது, ஹெக்டருக்கு 40 டன்கள்/
வருடம் பசுந்தீவன மகசூல் தரக்கூடியது.
சாகுபடிக்குறிப்புகள்:
1. பருவம் மற்றும் இரகம் : வடகிழக்குப்
பருவக்காற்றுக் காலத்தில் மழை வரும் போது
விதைக்கலாம். இரகம் கோ 1
2. மண் : வடிகால் வசதியுள்ள இரு
மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து
மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர்
நிலங்களிலும் பயிர் செய்யலாம்.
3. நிலம் தயாரித்தல் : 2 முதல் முறை உழவு
செய்து நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தில்
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf
விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil