Site icon Vivasayam | விவசாயம்

கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்

உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக
தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத்
தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின்
பொருளாதாரத்தை உயர்த்துகின்ற
முக்கியத் தொழிலாகவும், அன்னியச்
செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும்
ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய
பருத்தி சங்கம் (சிஏஐ) 2021-22 பயிர்
ஆண்டில் (அக்டோபர் – செப்டம்பர்)
பருத்தி உற்பத்தி 360.13 லட்சம் பேல்கள்
என மதிப்பிட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த
மகசூல் கிடைக்காததாலும் வெளிநாட்டிற்கு
அதிக பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டதாலும்
பஞ்சு விலை அதிகமாகிவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள ஐவுளி ஆலைகளுக்கு
ஆண்டுக்கு தேவைப்படும் 120 லட்சம்
பேல்கள் என்ற நிலையில் தமிழகத்தில்
வெறும் 4 லட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தி
செய்யப்படுகிறது. மேலும் உற்பத்தி அதிகம்
உள்ள மாநிலங்களில் இருந்து பருத்தியை
கொண்டு வருவதற்கான போக்குவரத்து
செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதால்
சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள
ஜவுளி ஆலைகளின் போட்டித் தன்மை
குறைந்துள்ளது. எனவே தமிழகத்தில்
பருத்தி உற்பத்தியை அதிகரிப்பது மிக
முக்கியமானதாக உள்ளது.

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Exit mobile version