Medicinal uses of Adhimadhuram ( Glycyrrhiza Glabra ) as mentioned in Siddha & Allopathy
சித்தர் பாடல்
கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங்
கண்ணோயுன் மாதம்விக்கல் வலிவெண் குட்டம்
பித்தமெலும் புருக்கிச் சரமா வர்த்த
பித்தமத மூர்ச்சைவிட பாகம் வெப்பந்
தத்திவரு வாதசோ ணித்ங்கா மாலை
சருவவிடங் காமியநோய் தாது நட்டங்
குத்திரும லாசியங்க மிதழ்நோ யிந்து
குயப்புணும்போ மதூக மெனக கூருங் காலே .
– பதார்த்த குண விளக்கம்.
அதிமதுரம் பண்டைய காலத்தில் இருந்து இந்தியா, ஆசியா, ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும், கண்டங்களிலும் கிடைத்து வரும் ஒரு மூலிகை
இயற்கையாகவே இனிப்பு சுவையுடைய ஒரு மூலிகை தண்டு. ஆங்கிலத்தில் Sweet wood என்று அழைப்பார்கள். இது பாரம்பரியமாகவே நம்முடைய உணவுப் பழகத்தில் இருந்து வரும் மூலிகையாகும்
சித்த மருத்துவ பலன்
ஜீரண குறைபாடு, விக்கல், காய்ச்சல், எலும்பு சுரம், வாத நோய், காமாலை, புகைச்சல் இருமல்(வறட்டு இருமல்), சுக்கில நஷ்டம், உடற்சூடு போன்வற்றிற்கு உள்ளுக்கு மருந்தாகவும், குஷ்ட ரோகம், தோளில் ஏற்படும் புள்ளிகள், சரும நோய்கள் சரும அழகு மற்றும் மூலிகை குளியலுக்கும் இவைகளுக்கு வெ ளிபூச்சாக பயன்படுத்தப்படுகிறது.
அலோபதி முறையில் இரைப்பையில் இருக்கும் புண், கேஸ்ட்டிரிக் அல்சர், கேஸ்ட்டிரிக் ரிப்ள்க்ஸ் ( எதுக்களித்தல்), வாந்தி, கல்லீரல் கொழுப்பு (பேட்டி லிவர்) கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள அதிக பொட்டாசியத்தை குறைக்கிறது , இரைப்பையில் இருக்கும் H பைலோரிக் என்று பாக்டீரியா தொற்றை அதிமதுர சாறு குணப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது
அதிமதுரம் வலி, வீக்கம், காய்ச்சல் , ஆரம்பக்கட்ட புற்று நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது இருமலை குணப்படுத்தவும், காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
செல்லின் வளர்ச்சிதை மாற்றத்தை சரிபடுத்தி புற்று நோய் வராமல் தடுக்கவும், வயோதிகத்தை தள்ளிப்போடுவதற்கும் , நியாபகத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், அரிப்புகள், கொப்பளங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. Hepatitis B, C போன்ற வைரஸ்களை பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஆரம்பக் கட்ட மஞ்சள் காமாலை நோயை கட்டுக்குள் வைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் பின்பு ஏற்படும் தொற்று மற்றும் கர்ப்பப்பை உபாதைகளை குறைக்கிறது.
பயன்படுத்தும் முறை
தோல்
அதி மதுரம் என்பது ஒரு மரத் தண்டு , இதை பொடியாக்கி பால் அல்லது பன்னீர் நீர் கலந்து மேற்புச்சாக பூசி காய வைத்து முகம் கழுவலாம்.
குளியல் பொடியுடன் சேர்த்து குளிக்கச் செய்யலாம்.
அதிமதுர டீ
அதி மதுர தண்டை நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி உடன் 250 மிலி நீர் அல்லது பால் சேர்த்து குடிக்கலாம் அல்லது டீ உடன் சேர்த்தும் குடிக்கலாம்.
குறிப்பு : இருதய, சிறுநீரக மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பயன்படுத்தவேண்டும். தொடர்ச்சியாக இதை எடுத்துக்கொள்ள கூடாது. ஏன் என்றால் இது இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவை குறைத்து அதனால் பக்க விளைவுகள் ஏற்படுத்திட வாய்ப்பிருக்கிறது என்பதை ஆய்வுகள் குறிப்பிடுகிறது. பொதுவாக இரண்டு நாளுக்கு ஒரு முறை இரண்டுதேக்கரண்டிகள் எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு உதவி மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002
அதிமதுரம் அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
99407 64680