Skip to content

உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்

இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன.

சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து என்று பொருள். இதனை ஒட்டகச்சிவிங்கி கெசல் (Giraffe Gazelle) என்றும் வல்லரின் கெசல் (Waller’s Gazelle) என்றும் அழைக்கின்றனர்.  இதன் விலங்கியல் பெயர் லிட்டோகிரேனியஸ் வல்லேரி (Litocranius walleri). இம்மான்களில் இரண்டு துணை சிற்றினங்கள் உள்ளன.

28 முதல் 52 கிலோ எடை வரை வளரும் இந்த விசித்திரமான்கள், நீண்ட காதுகளையும், சிறிய தலையையும், பெரிய காதுகளையும் கொண்டுள்ளன. இவற்றின் ஆயுட்காலம் 8 முதல் 13 ஆண்டுகளாகும்.

மரங்கள் மற்றும் புதர்ச்செடிகளின் இலைகள், தண்டுகள், மூலிகைகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை இவை உண்கின்றன.

200 வருடங்களாக ஆப்பிரிக்காவில் பொழுதுபோக்குக்காக வேட்டையாடப்படும் விலங்காக இதை பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவும், வாழிட அழிப்பினாலும் எண்ணிக்கையில் பெருமளவு குறைந்து, இன்று காடுகளுக்குள் 95,000 மான்கள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எனவே பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அருகும் தருவாயில் உள்ள விலங்குகள் (Near Threatened) வரிசையில் இணைத்துள்ளது.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Leave a Reply

Author