Site icon Vivasayam | விவசாயம்

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் விசித்திர வணிகம்- கங்காரு இறைச்சி ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவில் மனிதர்களின் எண்ணிக்கையை விட, கங்காருகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம். அங்கு 42 கோடிக்கும் அதிகமான கங்காருகள் இருப்பதாக 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமான கங்காருகளால், மனிதர்களுக்கு தொந்தரவு மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்று கருதி ஆஸ்திரேலியாவின் பல மாகாணங்கள் கங்காரு வேட்டையை சட்டபூர்வமாக்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 15 லட்சம் கங்காருகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருகள் பண்ணைகளில் வளர்க்கப்படுவதில்லை. ஆனாலும் கங்காரு இறைச்சி வணிகம், ஒரு வருடத்திற்கு 2.5 முதல் 2.7 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் தொழிலாக செயல்படுகிறது.

கங்காரு மாமிசத்தில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதியை குறைக்கும் தன்மை கொண்ட காஞ்சுகேடட் லினோலியிக் ஆசிட், மிக அதிக அளவில் உள்ளது.  அத்துடன் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சத்தும் (2%), அதிக அளவு புரதமும் கொண்டது.

பூர்வீக ஆப்பிரிக்க குடிமக்கள் கங்காரு இறைச்சியை விரும்பி உண்டாலும், அங்கு வேட்டையாடப்படும் கங்காருவின் மாமிசத்தில் 70% ஏற்றுமதி தான் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியர்களை விட கங்காரு இறைச்சியை மிக அதிக அளவில் விரும்பி வாங்குபவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன், ரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள மக்களே…!

 

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version