Site icon Vivasayam | விவசாயம்

புதிய அரிசி அமுது உண்ண நாள்

புதிய அரிசி அமுது உண்ண நாள்

திங்கள்புதன் குருவெள்ளி தன்னி லேதான்
சிறந்திடுபஞ் சமிதசமி பூர ணையும்
மங்களமாந் துதியையுடன் திரயோ தேசி
வருமேகா தசியோடு திரிதி கையும்
இங்கிதமாஞ் சோதிரோ கணியு மூலம்
இயல்பான மூன்றுத்தி ரங்க ளாகும்
சங்கையுள புனர் பூசம் பூச மஸ்தம்
சதையம்பூ ராடம்ரே வதியு மாமே.

இன்னமுங்கே ளனுஷமொடு மிருக சீரம்
இனிமையுள்ள திருவோண மிவைகள் யாவும்
தன்னமையா மிடபசிம்மங் கன்னியோடு
தகுங்கடக மீனமுந்தான் நல்ல தாகும்
பின்னமுள கரிநாளும் குருட்டு நாளும்
பேசரிய மரணயோ கங்கள்தள்ளி
நன்னயமாய்ப் புதியமுது பொங்கல் செய்து
நாட்டிலே சாப்பிடவும் நல்ல நாளே.

நாம் நிலத்திலிருந்து அறுவடை எடுத்த புதிய அரிசியை உண்ண நல்ல நாள்

திங்கள்,புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பஞ்சமி, தசமி , பவுர்ணமி, திரிதிகை, திரயோதசி, ரேவதி, ரோகிணி, மூலம், உத்திரம், உத்திரட்டாதி,உத்திராடம் ,புனர்பூசம், பூசம், அஸ்தம், சதயம், பூராடம், மிருக சீரிடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் மேற்சொன்ன நாட்களில், ரிசபம், சிம்ம், கன்னி, மீனம், கடகம் ஆகிய லக்கினங்களில் கரிநாள், குருட்டு நாள், மரண யோகம் இவையில்லாமல் பார்த்து நாம் நமது அரிசியை பொங்கல் செய்து சாப்பிட நல்ல நாள், இதைக்கொண்டே மக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
கல்லாவி
9942922002

Exit mobile version