Skip to content

அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

114 பேர் பங்களிப்பில் அக்ரிசக்தி மின்னிதழ் 15.05.2021 அன்று ஒரு வருடம் நிறைவு செய்ய உள்ளது

அதையோட்டி இரண்டு நாள் இணைய சந்திப்பு ஒன்றினை அக்ரிசக்தி சார்பாக நிகழ்த்த உள்ளோம்

நாளை 15.05.2021 மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கப்பட உள்ளது. திரு.ஆற்றல் பிரவிண்குமார் அவர்கள் யானையும் விவசாயமும் என்ற தலைப்பில் உரை நிகழ்துகிறார்

6.30 மணிக்கு விவசாயமும் செயற்கை நுண்ணறிவும் என்ற தலைப்பில் முனைவர்.அஜந்தாதேவி அவர்கள் உரையாற்றுகிறார். அந்நிகழ்வை திரு. மதுபாலன் அவர்கள் ஒருங்கிணைக்கிறார்

7.15க்கு திரு.கோபால் கண்ணன் அவர்கள் ஆண்டாள் மரச்செக்கு எண்ணெயும்- அக்ரிசக்திஉடன் இணைந்த வர்த்தகமும் என்ற தலைப்பில்உரை நிகழ்த்துகிறார்

7.30 மணிக்கு கால்நடை வளர்ப்பும் வாய்ப்பும் என்ற தலைப்பில் கால்நடை மருத்துவர் திரு.தேசிங்கு ராஜா அவர்கள் உரை நிகழ்த்துகிறார்

8.00 மணிக்கு மிக முக்கியமான நிகழ்வாக அக்ரிசக்தி விருதுகள் அ றிவிக்கப்பட உள்ளது. எங்கள் பார்வையில் அக்ரிசக்திக்கு உதவியவர்களையும்,விவசாயத்தின் வழியாக சில மாற்றங்களை செய்தவர்களை நினைவு கூறும் வகையில் இந்த விருது நிகழ்த்தப்பட உள்ளது.

ஞாயிறு நிகழ்ச்சி 16.05.2021 இன்னமும் களை கட்டும் ஏனெனின் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து ரூரல் பாஸ்கெட் நிறுவனம் வளர்ந்த கதை பற்றி அதன் நிறுவனர் திரு.பழனி ராஜன் அவர்களும்

சிறுதானியத்தின் வியாபார வாய்ப்பு என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ராஜபாபு அவர்கள் உரை நிகழ்த்துகிறார்

உடன் பலரின் வாழ்த்துச் செய்திகளும், அக்ரிசக்தியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளும் எடுத்துரைக்க உள்ளோம்

குறிப்பா விவசாயத்தில்
எனவே நாளை சனி, ஞாயிறு மாலை 6-9 விவசாயத்திற்காக ஒதுக்கிவையுங்கள். நிறைய பயனுள்ள தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்

 

https://us02web.zoom.us/j/81759406576?pwd=RlYvZVk0MGxSV0NrazRyQWVxZ05PZz09

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj