Skip to content

டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)

இது டிஜிட்டல் யுகம். டிஜிட்டல் கருவிகளும், மென்பொருட்களும், தகவல் தொடர்பு துறையும் இணைந்து ஒரு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருகின்றன. செல்போனும், இன்டர்நெட்டும், இல்லாமல் கைகளை பார்ப்பது கடினம்.

ஒரு குடும்பத்தில் உணவு எவ்வளவு அத்தியவசியமோ, அதே அளவு அத்தியாவசியமாகிவிட்டது செல்போனும், இன்டர்நெட்டும். ஒரு காலத்தில் இந்த டிஜிட்டல் கருவிகள் பணகாரர்களுக்குறியது, ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடம் இந்த கருவிகள் சென்று சேர்ந்துவிட்டது. ஏதோ ஒன்றாக சேர்ந்து விடவில்லை, மாறாக அவர்கள் வாழ்வையும் பொருளாதாரத்தையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.

வெறும் செல்போன், இன்டர்நெட் உதவியுடனும், ஆப்களின் உதவியுடன் உங்கள் வேலையை செய்து முடிப்பார்கள் அதிகமாகிவிட்டார்கள்.

ஒரு காலத்தில் வேலை தேடி அலைந்தவர்கள் உடனடி வருமானத்துக்கு இந்த ஆப்கள் பெரிதும் உதவுகிறது.கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் பிடித்துவிடலாம். இன்டர்நெட்டும் , ஸ்மார்ட்போனும், பெண்களின் வாழ்வில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

அண்மைய காலமாக டிஜிட்டல் உலகில் பல புதிய தொழில்நுட்ப மக்களும் வளர்ந்தபடியே தான் உள்ளது அவை நாம் செய்யும் வேலை செய்யும் முறையில் இருந்து உண்பது உறங்குவது வரை அனைத்தையும் புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன், ஆப், இன்டர்நெட், ஜிபிஎஸ், ரிமோட் சென்ஸிங், க்ரவுட் சோர்சிங், ஆர்டிபீஷியல் இன்டலிஜன்ஸ், பிக் டேட்டா,மெஷின் லேர்னிங் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது..

உலகில் அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பங்கள் நுழைந்து, கலந்து பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. அதே நேரம் பல சிக்கல்களை தீர்த்து உள்ளது. மனித குலம் தன் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி விட்டது..

அதே போல் மனிதர்களின் உணவை உற்பத்தி செய்ய உதவும் விவசாயத் துறையில் இந்த தொழில்நுட்பங்கள் உதவுமா?

ஆம்.

உலகில் என்ன மாற்றங்கள் வந்தாலும், உணவை தேடும் மனிதன் மட்டும் மாற்றிவிட முடியாது. மனிதனின் உணவு என்பது முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தது தான். அத்தகைய விவசாயமும், விவசாயிகளும் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அந்த சிக்கல்களில் இருந்து விடுபட டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிதும் உதவும். விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் அவர்களின் பொருளாதார செழிக்கவும், பல வகைகளில் டிஜிட்டல் விவசாயம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

எப்படி ?

என்பதை தான் நாம் இனி விரிவாக பார்க்க போகிறோம்.

முதலில் டிஜிட்டல் விவசாயம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்று ஒரு விவசாயி, தன் நிலத்தில் பயிரிட்டு, பாதுகாத்து, அறுவடை செய்து, அதை பொருளாக்கி சந்தையில் விற்கிறார். இந்த நடைமுறையில் தேவையான டிஜிட்டல் கருவிகள், மென்பொருள்கள், மற்றும் கருவிகளை ஒன்றிணைப்பது தான் டிஜிட்டல் விவசாயம்.

சில எளிய உதாரணங்கள்.

  1. விவசாயிகளுக்கு அவர்கள் ஊர் சார்ந்த தட்பவெட்ப சூழ்நிலை தகவல்களை SMS அனுப்புவது.
  2. ஸ்மார்ட்போன் செயலிகள் உதவியுடன் விலை ஏற்றம், மற்றும் சந்தை நிலவரத்தை அறிய வைப்பது.
  3. அவர்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வலைதளம் பயன்படுத்துவது.

-தொடரும்…

கட்டுரையாளர்:

வினோத் ஆறுமுகம்.

மின்னஞ்சல்: write2vinod11@gmail.com

Leave a Reply

editor news

editor news