தென்னை, அதிக இடைவெளியில் நடப்படும் பணப் பயிராகும். தென்னை மரங்களுக்கு இடையே காலியாக இருக்கும் நிலப்பகுதியில் பலவிதமான பயிர்களை ஊடுபயிர்களாக சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்குச் சாதகமாக தென்னை மரத்தின் வேர்ப்பகுதியும் தலைப்பகுதியும் அமைந்துள்ளன. தனிப்பயிராகத் தென்னை சாகுபடி செய்யப்படும் தோப்புகளில் மண்வளமும், சூரிய ஒளியும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
7.5 மீ X 7.5 மீ இடைவெளியில் தென்னை நடப்பட்டுள்ள தோப்புகளில் சுமார் 75 சதம் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாமல் உள்ளது. தென்னை மரங்களின் வேர்கள், அடிமரத்திலிருந்து 2 மீட்டர் ஆழம் வரையிலுள்ள 25 சதம் நிலப்பரப்பில் தான் பரவிக்கிடக்கின்றன. தென்னை ஒலைகளின் அமைப்பு சூரிய ஒளியின் ஒரு பகுதி ஒலைகளின் ஊடே புகுந்து சென்று, தரைமீது விழக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தென்னைமரங்களின் வயது மற்றும் தாவர வளர்ச்சியை பொருத்தும், தென்னை மரங்களுக்குளிடையே சூரிய ஒளி புகுந்து செல்லும் அளவை பொருத்தும், தென்னையின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
- ஏழு ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடைய மரங்கள்
அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை ஒரு பருவ பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம். கரும்பு, மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
- 7 முதல் 20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்
இந்த காலகட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை பயிர் செய்யலாம்.
iii. 20 ஆண்டுகளுக்கு மேலான வயதுள்ள மரங்கள்
இந்த வகை தோப்புகளில் கீழ்காணும் பயிர்களை சாகுபடி செய்யலாம்
பல பயிர் அமைப்பு
- தென்னை + வாழை + சிறுகிழங்கு + வெண்டை ஆகியவை கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றவை.
- தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய், மற்றும் வெண்ணிலா ஆகியவற்றை மேற்கு பகுதியில் பயிரிடலாம்.
ஊடுபயிர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரை முறைகள்:
- மண்வளம், மழைப்பொழிவு, பாசன வசதி மற்றும் தட்ப வெப்பநிலை ஆகிய காரணிகளை கவனமுடன் கண்டறிந்து, அதற்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
- தென்னை மரங்களுக்கு இணையாக உயரமாக வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்யக்கூடாது
iii. முதன்மைப் பயிரான தென்னையைவிட, ஊடுபயிர்களின் ஆயுட் காலம் அதிகமாக இருக்க கூடாது.
தென்னைக்கேற்ற ஊடுபயிர்கள்
- கிழங்கு வகைகள்
- தானிய மற்றும் தினை வகைகள்
iii. பயிறு வகைகள்
- எண்ணெய் வித்துக்கள்
- பல வகைகள்
- காய்கறிப் பயிர்கள்
vii. நறுமணப் பயிர்கள் மற்றும் சுவையூட்டும் பயிர்கள்
கட்டுரையாளர்கள்:
மு. யசோதா மற்றும் கே.ஷர்மிலி, உதவிப் பேராசிரியர்கள், வானவராயர் வேளாண்மை நிறுவனம், பொள்ளாச்சி. மின்னஞ்சல்: yasoagri@gmail.com