Site icon Vivasayam | விவசாயம்

பருத்திப் பயிரில் களை மேலாண்மை

பருத்தி பயிரானது தமிழகத்தில் முக்கியமாக பெரம்பலூர், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சமார் 1.2 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்கள்

  1. மானாவாரியாக பயிரிடுதல்
  2. பழைய தொழில்நுட்பத்தையே சார்ந்திருத்தல்
  3. சரியான முறையில் பருத்திச் செடியை பராமரிக்க இயலாமை
  4. களைகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்

களைகள்:

விவசாயிகள் பருத்தி விதை ஊன்றியவுடன், களையும் பருத்தியும் சேர்ந்தே முளைக்க ஆரம்பிக்கிறது. களையானது பருத்தியுடன் நீர், சத்து (தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச்சத்து), சூரிய ஒளி  ஆகிய தேவைகளுக்காக போட்டியிடுகிறது. விவசாயிகள் 30-40 நாட்கள் வரையில் எந்த விதமான களைக் கட்டுப்பாடும் செய்யவில்லையென்றால், குறைந்தது 70-80% வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

விவசாயிகள் களையைக் கட்டுப்படுத்த முயன்றால்,

  • கைக்களை எடுக்க – ரூ.6000/ஏக்கருக்கு செலவாகிறது,
  • இயந்திரம் மூலம் களை எடுக்க ரூ. 2௦௦௦/ ஏக்கருக்கு செலவாகிறது (இதற்கும் சரியான இடைவெளி விட்டிருந்தால் மட்டுமே இந்த முறையில் களை எடுக்க முடியும், சில சமயங்களில் பயிர்கள் சேதமடையவும் வாய்பிருக்கிறது),
  • களைக்கொல்லி (பயிரிதயோபிக் சோடியம் 6% + க்யூசலாபாப் ஈதைல் 4% ) – ரூ.1500/ஏக்கருக்கு மட்டுமே செலவு ஆகிறது.

இரு வெவ்வேறு மருந்துகளின் கலவையான (பயிரிதயோபிக் சோடியம் 6% + க்யூசலாபாப் ஈதைல் 4% ) MEC செடி முழுவதும் ஊடுருவி செயல்படும் திறன் வாய்ந்தது. அகன்ற இலை மற்றும் புல் வகைக் களைகளைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தது. கடைகளில் ஹிட்வீட் மேக்ஸ் என்ற பெயரில் கிடைக்கிறது.

மருந்து பயன்படுத்த வேண்டிய அளவு

  • ஒரு ஏக்கரில் 450 மி.லி. மருந்தினை 150-200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயன்படுத்த வேண்டிய நேரம்

  • விதைப்புக்கு பின்பு 0-3 நாட்களில்-மண்ணில் தகுந்த ஈரப்பதம் மிக முக்கியம் (அல்லது) விதைப்புக்கு பின்பு, புதிதாக முளைக்கின்ற மற்றும் 2-3 இலைகள் கொண்ட களைகள்- மண்ணில் தகுந்த ஈரப்பதம் முக்கியம்.

நன்மைகள்:

  • பயிருக்கு சிறந்த பாதுகாப்பு
  • நீண்ட கால களைக் கட்டுப்பாடு (25-30 நாட்கள்)
  • குறைந்த செலவு
  • அதிக எண்ணிக்கையிலான செடிகள் மற்றும் அதிக மகசூல்
  • களை வரும் முன்பாக அல்லது புதிதாக முளைக்கின்ற களைகளைக் கட்டுப்படுத்தும்
  • பயிர் முழுவதும் ஊடுருவிச் செயல்படும் திறன்
  • மண்ணின் தன்மையை பாதிக்காது, பயிர் ஆரோக்கியமாக வளரும்.

களைக்கொல்லி தெளிக்கும் போது செய்ய வேண்டியவை

  • மண்ணில் தகுந்த ஈரப்பதம் முக்கியம் (கால் பதியும் அளவிற்கு)
  • ஒரு ஏக்கருக்கு 450 மி.லி. மருந்து மற்றும் 150-200 லிட்டர் தண்ணீர்.
  • விதைப்புக்கு பின்பு 0-3 நாட்களில் / விதைப்புக்கு பின்பு, புதிதாக முளைக்கின்ற மற்றும் 2-3 இலைகள் கொண்ட களைகள்
  • மேலே குறிப்பிட்டுள்ள மருந்தை மட்டும் தனியாக பயன்படுத்தவும்
  • மருந்து தெளித்த பின்பு 2-3 மணி நேரம் மழை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • கைத்தெளிப்பானையே பயன்படுத்த வேண்டும்

செய்யக்கூடாதவை

  • மண்ணில் தகுந்த ஈரப்பதம் இல்லாத போது மருந்து தெளிப்பதை தவிர்க்கவும்
  • விதைப்புக்கு முன்பே மருந்து தெளிக்கக் கூடாது
  • நன்றாக வளர்ந்த களைகள் மீது தெளிப்பதைத் தவிர்க்கவும்
  • பவர் ஸ்பிரேயர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • எந்தவித மருந்தையும் இதனுடன் கலந்து தெளிக்கக்கூடாது
  • ஊடுபயிர் உள்ள வயலில் பயன்படுத்தக்கூடாது.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர். ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com
  1. திரு. சு. லட்சுமணன், இணைப் பொது மேலாளர் (விற்பனை), கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: lakshmangodrej@yahoo.com
Exit mobile version