Skip to content

மதிப்புக்கூட்டலின் சிறப்பும் மற்றும் அதன் முக்கியத்துவமும்

மதிப்புக் கூட்டல் (value addition) என்றால் என்ன அதன்  சிறப்பு அம்சம் என்ன  என்பது குறித்து அறிய வேண்டியவற்றை கீழே காண்போம்.

மதிப்புக்கூட்டல்: எந்த‌ ஒரு வேளாண் மூலப்பெருட்களையும்  செயலாக்கமோ அல்லது அதன் அடுத்த உற்பத்தி நிலைக்கோ கொண்டு செல்வதை மதிப்புக்கூட்டல் என்பார்கள்.

எது மதிப்பைச் சேர்க்கும்:

  • தரம் (quality)
  • செயல்பாடு(functionality)
  • உருவம்(form)
  • இடம்(place)
  • நேரம் (time)
  • பயன்படுத்தும் விதத்தை சுலபம்‌ ஆக்குதல் (ease of possession)

இவை அனைத்தும்  வெவ்வேறு விதங்களில் வேளாண் பொருட்களுக்கு மதிப்பினை கூட்டுகின்றது.

மதிப்புக்கூட்டிய பொருள்களின் தகுதிப்பாடுகள் :

  • முதன்மை வேளாண் பொருட்களின் பொருளாதார தகுதியை சில செயலாக்க முறையால் மதிப்புக் கூட்டல் அதிகப்படுத்துகிறது.
  • ஊட்டச்சத்து பாதுகாப்பில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
  • அதிக இலாபகர நோக்கத்திற்கு மதிப்புக்கூட்டல் பங்கு அவசியம் ஆகிறது.
  • விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டிதரும் வல்லமை பெற்றது.
  • வேளாண் பொருட்களின் வாழ்நாளை அதிகரிக்கும்.
  • வேளாண் பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியையும்  உள்நாட்டு தேவைகளையும் மதிப்புக்கூட்டல் அதிகப்படுத்தும்.

மதிப்புக்கூட்டலில் அரசின் பங்கு:

தற்போது‌ மத்திய மற்றும் மாநில அரசுகள் மதிப்புக்கூட்டலில் பல‌ சலுகைகளை வழங்கி வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு 100% FDI (Foreign Direct Investment) வர்த்தகத்தில் உணவு பொருள்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. 42 உணவு பூங்காக்கள் அமைக்க உள்ளது.

சீருவில் நடந்த‌ தேங்காய் திருவிழாவில் சிறப்பு உறை ஆற்றிய ஆர்.சௌதப், (இயக்குநர், இந்திய மலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்) தனது உரையில் ,சராசரியாக விவசாயிகளின் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் 2022-குள்  நாங்கள் கிட்டத்தட்ட 2.50 லட்சமாக உயர்துவோம். இது மதிப்புக் கூட்டல் (value addition) வாயிலாக அமையும் என்று கூறியுள்ளார்.

மதிப்புக்கூட்டலின் குறைபாடுகள்:

அனைத்து வழிகளிலும் நல்லது கெட்டது இருக்கும் அவ்வாறு இதிலும் உண்டு. மதிப்பு சேர்கப்படுவதற்கு அனைவருக்கும் பொருந்தும் எளிதான வரைபடம் எதுவும் இல்லை. மதிப்புக்கூட்டும் முறை பயிர்களை பொருத்தும் மாறுபடும். அதிக முதலீடும் தேவைப்படலாம்.

தற்போது உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தகுந்த வருமானம் கிடைப்பது இல்லை. விவசாய பொருட்களுக்கும் தகுந்த விலையும் நிர்ணயிக்கபடவில்லை. இவ்வாறு இருக்கும் நிலையில் மதிப்புக்கூட்டல் மிகுந்த லாபத்தையும் அதிகாரத்தையும் அமைத்து தரும்.

கட்டுரையாளர்:

ஆ. அருணாச்சலம், இளநிலை மூன்றாம் ஆண்டு வேளாண் மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

Leave a Reply